தாயார் வெளிநாட்டில்; 17 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்.

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் 17 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரின் பெண்ணின் சிறிய தந்தையார் பூவரசன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிஅய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் வாழும் சிறுமியின் தந்தை விட்டுச்சென்ற நிலையில், தாயார் இரண்டு பிள்ளைகளுடன் வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தார்.
குறித்த பெண் வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுள்ள நிலையில் இரு பிள்ளைகளும், தாயின் இரண்டாவது கணவரான, சிறிய தந்தையாருடன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் 17 வயது பெண் உடல் நிலை சுகவீனமுற்ற நிலையில் பூவசரன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பெண் கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பூவரசன்குளம் பொலிசார் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தாயின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.