அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு.

அத்தியாவசியமற்ற பொருட்கள் என 367 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
திராட்சைப் பழம், அப்பிள் உட்பட பழவகைகள், சொக்கலேட் உட்பட பால் உற்பத்திகள், நூடுல்ஸ் வகைகள், பழச்சாறுகள், தண்ணீர், பியர், வைன் வகைகள், சிகரெட்டுகள் மற்றும் சுருட்டு வகைகள் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், டயர்கள், செருப்பு மற்றும் சப்பாத்துகள், இலத்திரனியல் உபகரணங்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கே தடை விதிக்கப்படவுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இன்று (09) நள்ளிரவு முதல் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.