வார்னேவின் பண்பு குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்.
கடந்த வெள்ளிகிழமை வார்னே தாய்லாந்தில் உள்ள தனது விடுதியில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார்.
வார்னேவின் இந்த மரணம், கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வார்னேவின் மரணம் குறித்து தாய்லாந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வார்னே போதை பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இருதய பிரச்சினையும், ஆஸ்துமா பிரச்சினையும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வார்னே குறித்து சச்சின் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வார்னே உயிருடன் இருக்கும் போது, அவரை பற்றி அமேசான் பிரைம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்தது. அதில் கிரிக்கெட் களத்தில் வார்னேவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சச்சினின் பேட்டியும் இடம்பெற்றிருந்தது.
இதில் பேசிய சச்சின், வார்னே ஒரு முறை மும்பைக்கு வந்திருக்கும் போது, உங்களுக்கு இந்திய உணவுகள் பிடிக்குமா என்று கேட்டேன். அதற்கு பிடிக்கும் என்றார். அப்போது என் வீட்டிற்கு விருந்துக்காக அழைத்தேன். வார்னேவுக்காக நானே சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை சமைத்து பரிமாறினேன்.
ஆனால் வார்னே சாப்பிடுவது போல் நடித்துவிட்டு, எங்கள் கிட்சனுக்கு சென்று அவரே ஒரு சாண்ட்வெஜ் செய்து சாப்பிட்டார். நாங்கள் சமைத்த உணவு காரமாக இருந்தது. அதனை வார்னேவால் சாப்பிட முடியவில்லை. எனினும் என் மனது கஷ்டப்படும் என்பதற்காக வார்னே அதை வெளிக்காட்டி கொள்ளவே இல்லை. அது தான் வார்னேவுடன் பண்பு என தெரிவித்துள்ளார்.