குளவி கொட்டி குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லிந்துலை, சென்கூம்ஸ் தோட்டத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழில் முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே அவர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அவர், லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சென்கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய நபரே இவ்வாறு மரணித்துள்ளார்.