மணிமேகலை பிரசுரத்தின் 45 புத்தகங்களின் வெளியீட்டு விழா!

45 ஆவது சென்னை புத்தத் திருவிழா கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், அதில் மணிமேகலைப் பிரசுரத்தின் 45 நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வாழ்த்துரை வழங்கினார்.
மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஒருங்கிணைப்பில் சென்னை வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வு இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் பா.புகழேந்தி தலைமையிலும், இரண்டாம் பகுதி சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வீ.பரதிதாசன் தலைமையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தாம்பரம் பொலிஸ் ஆணையாளர் ரவி ஐ.பி.எஸ்., இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, இயக்குநர் பாண்டியராஜ், நடிகர்களான மதன்பாப், வையாபுரி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மணிமேகலை பிரசுரத்தின் 45 நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.