மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கு.. தேடப்படும் நபருக்கு பதிலாக சரணடைந்த மற்றொரு நபர் – போலீஸ் விசாரணை

திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் அரங்கேறியது.

சென்னை மடிப்பாக்கம் 188வது வார்டு வட்ட செயலாளரும், திமுக பிரமுகருமான மடிப்பாக்கம் செல்வம் பிப்ரவரி 1ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிஷோர், விக்னேஷ், சஞ்சய், விக்னேஷ், புவனேஸ்வர், உள்ளிட்ட 5 பேரை விக்கிரவாண்டியில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். பின்னர் அருண் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள முருகேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியை தேடிவந்த நிலையில் இன்று வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர் இவ்வழக்கில் தொடர்புடைய முருகேசன் என்பவனின் கூட்டாளி என கூறப்படுகிறது.

சரணடைந்த நபர் குறித்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த மடிப்பாக்கம் ஆய்வாளர் சிவக்குமார் தாம்பரம் நீதிமன்ற வளாகத்திற்கு சென்று சரணடைந்த சதீஷ்யை பார்த்துவிட்டு தேடப்படும் நபர் இந்த சதீஷ் இல்லை அவர் சண்டே சதீஷ் என கூறியதன் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் கூலிப்படை தலைவன் முருகேசனை பிடித்தால்தான் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாத ஒருவர் தேடப்பட்டு வரும் நபரின் பெயராக இருப்பதால் மாறி சரணடைந்து தேடப்பட்டு வரும் நபரை காப்பாற்ற இந்த முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.