இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்- இலங்கைக்கு விதித்த நிபந்தனை.

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான அறிவிப்பை இந்திய மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதில் 75 வீதம் இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பொருட்களை கொள்வனவு செய்யவும், 25 வீதம் ஏனைய நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யவும் பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.