சீனாவில் புதிய வைரஸ் பரவல்? முழு ஊரடங்கு அறிவிப்பு.

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் உள்ளது. இந்த நகரில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் தான் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது. இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, எப்போதிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.