ரஷ்ய படையெடுப்பு எதிரொலி: அமெரிக்காவில் பெட்ரோல் விலை கிடு கிடு உயர்வு.
உக்ரைன் மீது ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால், அங்குள்ள மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து வெள்ளைமாளிகை கூறுகையில், அமெரிக்காவில் அடுத்த சில மாதங்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானது தான்.
சில மாதங்கள் கழித்து நிலைமை கட்டுக்குள் வந்துவிடும். அப்போது பெட்ரோல் மற்றும் எரிசக்தியின் விலை கட்டுக்குள் இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.