‘‘காதலர்களின் கண்ணீர் துளிகளை கதையாக்கி இருக்கிறேன்’’
‘‘பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘ஊமை விழிகள்’, ‘சிவப்பு ரோஜாக்கள்’ போன்ற திகில் பட வரிசையில், வித்தியாசமான கதையை கருவாக கொண்டு ‘முகமறியான்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார், அந்தப்படத்தின் டைரக்டர் சாய் மோரா. அவர் மேலும் கூறியதாவது:-
‘‘காதலர்களின் உணர்வுகளை உணர்வுப்பூர்வமாக உணர்த்தும் கதை, இது. காதல் ஏமாற்றங்களை சந்திக்கும்போது, அந்த வலியை உணரும் வகையில், கண்ணீர் துளிகளை கதைக்களமாக்கி இருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் பல நெருக்கடிகளை சந்தித்து, ஆந்திரா வனப்பகுதிகளில் 55 நாட்கள் படப் பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறோம். தயாரிப்பாளர் பி.திலீப் குமார் வில்லனாக நடித்து படத்தை தயாரித்து இருக்கிறார்.
அவருடன் கிரண்குமார், திலீப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், தளபதி தினேஷ், காயத்ரி அய்யர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து, ஒரு பாடலை பாடியும் இருக்கிறார்.’’