முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுதலையில் தாமதம்
திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு,சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதனால் கடந்த 21ஆம் தேதியில் இருந்து புழல் சிறையில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் புழல் சிறை முன்பு கூடினர்.
அதிமுகவின் தொண்டர்கள் சிறை வாசல் முன்பு கூடி வந்த நிலையில் சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது எனற விதி உள்ள நிலையில், மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை செய்யப்படவில்லை. இதனால் 4 மணி நேரமாக முன்னாள் அமைச்சரை வரவேற்க காத்திருந்த அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் கால தாமதமாக மனுவை வழங்கியதால் இன்று புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பபடாத அமைச்சர் ஜெயக்குமார் நாளை காலை 6 மணிக்கு மேலாக சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.