மார்ச் 14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமை போன்று மாணவர்களை அழைக்க சுற்றுநிருபம்.
2021 கல்வி ஆண்டுக்காக எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களை வழமை போன்று அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் கலாநிதி கே. கபில சீ பெரேரா விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்று நோயைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு இதற்கு முன்னர் (04) அறிவித்திருந்தது.
ஆயினும், எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களையும் வழமை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா புதிய சுற்றறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை மேற்கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.