மத்தியப் பிரதேசத்தில் ஓடுபாதையை தாண்டிச் சென்ற விமானத்தால் பரபரப்பு

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் தில்லியில் இருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானம் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. அப்போது விமானம் ஓடுபாதையைவிட்டு 10 மீட்டர் தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இதில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.