ரஷிய அதிபர் புதின் கடினமானவராக உள்ளார் – பிரான்ஸ் அதிபர்.
உக்ரைன் மீது ரஷியா இன்று 18-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. மேலும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறவும், மனிதாபிமான உதவிகள் வழங்கவும் ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போரை நிறுத்தக்கோரி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகிய இருவரும் ரஷிய அதிபர் புதினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதின் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், கடினமானவராகவும் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைனில் நடத்தி வரும் போரை நிறுத்துவதில் ரஷியா எந்த அக்கரையும் காட்டவில்லை’ என பைடன் தெரிவித்தார்.