ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023ஆம் ஆண்டுக்கான போட்டிகள் நடந்துவருகின்றன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றி சதவிகிதங்களின் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஃபைனலுக்கு முன், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.
ஆஷஸ் தொடரில் அபார வெற்றி பெற்று 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி தான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸி., விளையாடிவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் ஆஸ்திரேலிய அணி தான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 77.77 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.
அதேபோல் 66.66 சதவிகித வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2ஆம் இடத்திலும், 60 சதவிகித வெற்றியுடன் தென் ஆப்பிரிக்கா 3ஆம் இடத்திலும் உள்ளன.
இலங்கை அணி 4ஆம் இடத்திலும், இந்திய அணி 5ஆம் இடத்திலும் இருந்த நிலையில், இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதையடுத்து, 58.33 சதவிகிதத்துடன் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது. 50 சதவிகிதத்துடன் 5ஆம் இடத்திற்கு பின் தங்கியது இலங்கை அணி.
நியூசிலாந்து அணி 6ஆம் இடத்திலும், வங்கதேசம் 7ஆம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 8ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி கடைசி இடத்திலும் உள்ளன.