பிரான்சில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை.
ரஷ்யா-உக்ரைன் யுத்தம் காரணமாக இவ்வாண்டில் பிரான்ஸ் பெரும் பணவீக்கத்தைச் சந்திக்கும் எனவும், குறிப்பாக ‘எரிபொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை’ போன்றவற்றில் பணவீக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் Banque de France எச்சரித்துள்ளது.
அதன்படி, 3.7% இல் இருந்து 4.4% இற்குள் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும், அடுத்து வரும் மாதங்களில் பிரான்சில் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்வடையும் எனவும். பெற்றோல் டீசல், எரிவாயு உள்ளிட்ட பொருகளின் விலைகளும் அதிகரிக்கும் எனவும் Banque de France எச்சரித்துள்ளது.
அதேவேளை, பிரான்சின் பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவு ஏற்படும் எனவும், Banque de France எச்சரித்துள்ளது.