ஏரியாவுல யார் கெத்து.? கடையில் புகுந்து வாலிபரை வெட்டிய கும்பல்

சென்னை அருகே வாலிபரை வெட்டிய வழக்கில் இளம் சிறார் உடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ப்ரியன்(21). இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர் 3வது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது 5பேர் கொண்ட கும்பல் ஒன்று விஷ்ணுவை சரமாரியாக வெட்டி தப்பியோடியது. பலத்த காயங்களுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் விஷ்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோலை ராஜா(19), சந்தோஷ்குமார்(20), சக்திவேல்(19), ஆதம்பாக்கத்தை சேர்ந்த மணிமாறன்(19), 18-வயதுடைய இளம்சிறார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் அதன் தொடர்ச்சி விஷ்ணுவை கொலை முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான ஐந்து பேரில் நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொருர் இளம்சிறார் என்பதால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.