விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிளில் பேரணி!

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று சைக்கிளில் பேரணியாக சபை அமர்வுக்குச் சென்றனர்.
அவர்கள் மல்லாகத்திலிருந்து வலி. வடக்கு பிரதேச சபை வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்
தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் வலி. வடக்கு பிரதேச சபையின் சகல உறுப்பினர்களும் இந்தச் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர்.