ஹிஜாப் அணிந்ததால் மனைவிக்கு ரயிலில் அனுமதி மறுப்பு: கணவன் புகார்
மும்பையில் ஹிஜாப் அணிந்து வந்ததால் ரயிலில் மனைவிக்கு ரயிலில் அனுமதி மறுக்கப்பட்டதாக கணவன் ரயில்வே காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பர்வேஷ் மண்டிவாலா என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளனர்.
அப்போது அவரது மனைவி ஹிஜாப் அணிந்திருந்ததால் ரயிலில் அமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள மும்பை காவல் துறை ஆணையர் சஞ்சய் பாண்டே, ரயிலில் இருந்த சிலர் புடவை அணிந்திருந்த பெண்களை அமர அனுமதித்துள்ளனர். ஆனால் குழந்தை வைத்திருந்தும் ஹிஜாப் அணிந்திருந்ததால் அமர இடம் அளிக்காதது முட்டாள்தனமானது என்று பதிவிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கா்நாடக உயா்நீதிமன்றம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.