ரஷியா கைப்பற்றிய கெர்சன் விமான நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்.
உக்ரைனில் தலைநகர் கீவில் இருந்து 450 கி.மீ. தென்கிழக்கில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இந்நிலையில், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தின் மீது உக்ரைன் படைகள் குண்டு வீச்சு நடத்தி உள்ளன. விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல ஹெலிகாப்டர்களும், வாகனங்களும் தீயில் எரிந்துள்ளன. அந்த விமான நிலையத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலால் தீப்பிழம்புகளில் இருந்து மேலே அடர்த்தியாக கரும்புகை எழுந்துள்ளது.