பெருமெடுப்பில் மே தினக் கூட்டம் அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானம்.

எதிர்வரும் மே தினக் கூட்டத்தைப் பெருமெடுப்பில் நடத்துவதற்கு 11 அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுக்கு எதிராக ‘விமல் சூறாவளி’ எனும் தொனிப்பொருளிள் இம்மாதம் 27 ஆம் திகதி மாபெரும் கூட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இதற்கு சில தரப்புகள் உடன்படாததால் அந்தக் கூட்டம் கைவிடப்பட்டது.
எனினும், மே தினத்தைப் பெருமெடுப்பில் நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடன்பட்டுள்ளது. இதற்கு ஏனைய கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
எனவே, மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு விரைவில் குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.