சச்சின் பெரிய பேட்ஸ்மேனா? விராட் பெரிய பேட்ஸ்மேனா?
விராட் காலத்தோடு ஒப்பிடும்போது சச்சினின் காலத்தில் ஒருநாள் போட்டிகள் கொஞ்சம் கடினம்.
ஆனால் இன்று டெஸ்ட் போட்டிகளைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில், டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் முடிவு தெரியும் வகையில் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகத்தான் இருக்கிறது. இப்படியான முறை சச்சின் காலத்தில் கிடையாது.
இதையெல்லாம் எடுத்து வைத்து, ஒருநாள் போட்டிகளின் இன்றைய விதிமுறைகள் அன்று இருந்திருந்தால் சச்சின் இன்னும் கொஞ்சம் ரன்களையும், சதங்களையும் அடித்திருப்பார் என்றும், சச்சின் காலத்திய டெஸ்ட் ஆடுகளங்கள் விராட்டிற்கு கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் ரன்களையும், சதங்களையும் அடித்திருப்பார் என்றும் பேசலாம். இதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால் இருவரையும் எண்களைக் கொண்டு அளந்து சிறந்தவர் யாரென்று அறிவிப்பது கிரிக்கெட் அறியாமைதான்!
சச்சின் யாராலும் கைக்கொள்ள முடியாத அதிசய, அழகிய பேட்டிங் தொழிற்நுட்பம் வாய்த்தவர்.
விராட் யாரும் தன்னைப் பார்த்துப் பின்தொடர முடிகின்ற, கற்றுக்கொள்ள முடிகின்ற எளிமையான, பாதுகாப்பான பேட்டிங் தொழிற்நுட்பம் கொண்டவர்.
இதை வைத்து யார் சிறந்தவரென்று கூற முடியுமா என்றால் அதிசய திறமை என்கின்ற காரணத்தால் சச்சினைக் கூறலாம். கிரிக்கெட்டர்களுக்கு இது புரியும். சச்சின் இரசிகர்களுக்கே இந்தக் கூற்றின் முழுமை புரிவது கடினம்.
ஆனால் ஒரு இடத்தில் இருவரும் சமம்தான். அந்த ஒன்றைத்தான் ஒரு வீரரிடமிருந்து கிரிக்கெட் முதன்மையாய் எதிர்பார்க்கிறது.
அது அர்ப்பணிப்பு!
சச்சின் போன்ற ஒரு அதிசய வீரர் ஆடி முடித்துப்போன பின்பு, அவர் இல்லாத குறையை, அவரை இந்திய ஆட்டங்களின் போது தொலைக்காட்சியில் காண முடியாத வெறுமையை உணரா வண்ணம் ஒருவன் அதற்கடுத்து விளையாடி வெற்றிகளைக் கொண்டுவந்திருப்பது, எத்தகைய சாதனை என்பது, சச்சின் எப்படிப்பட்ட திறமையானவரென்று புரிந்தவர்களுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரியும்!
?RICHARDசச்சின் பெரிய பேட்ஸ்மேனா?
விராட் பெரிய பேட்ஸ்மேனா?