வரலாற்று சாதனையில் இடம்பிடித்த பாபர் ஆசாம்!

43 ஆண்டுகளாக கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 556 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 148 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 408 ரன்கள் என்ற பெரும் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 97 / 2 ரன்களுக்கே டிக்ளர் செய்தது. மேலும் 505 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

505 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி தாக்குப்பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒற்றை நபராக கேப்டன் பாபர் அசாம் அணியை தூக்கி நிறுத்தினார். 425 பந்துகளை சந்தித்த அவர் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 196 ரன்களை குவித்தார்
.
இந்நிலையில் இதுதான் பெரும் சாதனையாகியுள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் இதுவரை 3 வீரர்கள் மட்டுமே 400 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளனர். அந்த பட்டியலில் 3ஆவது இடத்தில் சுனில் கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு 443 பந்துகளை சந்தித்து இணைந்தார். தற்போது 4ஆவது வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 425 பந்துகளை சந்தித்து இணைந்துள்ளார்.

4ஆவது இன்னிங்ஸில் அதிக பந்துகளை சந்தித்தவர்களின் பட்டியல்

492 – இங்கிலாந்து வீரர் மைக் ஆதர்டன் ( 1995 )

462 – இங்கிலாந்து வீரர் ஹெர்ப் சுட்க்ளிஃப் ( 1928 )

443 – இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் ( 1979 )

425 – பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ( 2022 )

இதே போல சர்வதேச கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த கேப்டன்களின் பட்டியலில் மைக்கேல் ஆதர்டன் 1995ம் ஆண்டு 185* அடித்து முதலிடத்தில் இருந்து வந்தார். ஆனால் இன்று பாபர் அசாம் 196 ரன்களை அடித்து முந்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.