ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்.
நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி தற்போது தனது முழுகவனத்தையம் சினிமாவில் செலுத்தி வருகிறார்.
தனுஷ் நடித்த ‘3’ மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படங்களை இயக்கினார். தற்போது முசாபிர் என்ற பாடல் ஆல்பத்தை மூன்று மொழிகளில் இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.
நேற்று முன்தினம் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா.
லாரன்ஸ் அண்ணாவை பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி பெற்றது’ என தெரிவித்துள்ளார். இந்த படங்களை அவரே இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படம் துர்கா என கூறப்படுகிறது.
இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் தான் இயக்குவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சமீபத்தில் விலகிக்கொள்கிறோம் என அறிவித்து இருந்தனர்.
எனவே துர்கா படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
ரஜினி இல்லை என்றால் சினிமாவில் தனக்கு இந்த இடம் இல்லை. அவர்தான் சினிமாவில் நிலையான இடம் கொடுத்தார். தலைவர் ரஜினியின் மகள்கள் தன் தங்கைகள். அவர்களுக்காக நான் இருப்பேன் என லாரன்ஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசன் நடிக்கவுள்ள ஒரு படத்தையும் ஐஸ்வர்யா இயக்குவார் என்ற மற்றொரு தகவலும் உலா வருகிறது.