உக்ரைனில் இருந்து 300 பேர் அகதிகளாக ரஷியா சென்றனர்.
உக்ரைன் துறைமுக நகரான மரியுபோல், ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்தியில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷியாவின் ரோஸ்டோவ் பகுதிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.
இதை ‘கலீஜ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கே அகதிகளாக உக்ரைனியர்கள் சென்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.