மோசடியான விளம்பரங்களை அனுமதித்ததாக, ஆஸ்திரேலியா Facebook மீது சட்ட நடவடிக்கை
மோசடியான விளம்பரங்களைக் குறிப்பிட்ட பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்டு அனுமதித்ததாகக் கூறி, ஆஸ்திரேலிய அரசாங்கம் Facebookஇன் மூல நிறுவனமான Meta மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகின் ஆகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான Facebook தெரிந்தே பொய்யான, தவறாக வழிநடத்தக்கூடிய, ஏமாற்றும் வகையான விளம்பரங்களை வெளியிட்டதாக ஆஸ்திரேலியா குற்றம் சுமத்தியது.
அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க நிறுவனமான Meta நிதித் தடைகளையும் ஏனைய அபராதங்களையும் எதிர்நோக்கலாம்.
Facebookஇன் Algorithm-எனப்படும் கணினிவழித் தீர்வுக்கான நிபந்தனை நிரல், குறிப்பிட்ட மோசடிக்கு எளிதில் ஆளாகும் பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்டு விளம்பரங்களைக் காட்டியதாகக் கூறப்பட்டது.
அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆஸ்திரேலியப் பிரபலங்கள் குறிப்பிட்ட சேவைகளையும் பொருள்களையும் ஆதரிப்பதுபோன்ற விளம்பரங்களும் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.