ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு.

ஜப்பானின் வடகிழக்கு மாகணம் ஐவாட்டில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று இரவு 11.25 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக ஜப்பானில் கடந்த புதன் கிழமை 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் காயமைடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.