டக்ளஸுக்குக் கொரோனா உறுதி!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நயினாதீவுக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவின் நாகவிகாரை விஜயத்தின்போது அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.