“குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும்.”

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய அரசு எவரின் ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை; தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்கின்றது.
மின்சாரக் கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுக்கமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சிறந்த பொருளாதார அறிவுள்ளது.
தற்போதைய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தன்னிச்சையாகச் செயற்படுகின்றார். இந்தியாவிடமிருந்து பெற்ற கடனைச் செலவு செய்த பின்னர் அவர் கடன் பெறுவதற்காக வேறு ஒரு நாட்டுக்குச் செல்வார்.
ஜனாதிபதியாலோ, பிரதமராலோ பஸில் ராஜபக்சவின் நடவடிக்கைளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ராஜபக்சகளின் குடும்ப ஆட்சியில் பஸிலின் கை மேலோங்கியுள்ளது. குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும்” – என்றார்.