ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப ராகு, கேது பலன்கள்.
கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை, கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை’ என்பது பழமொழி. எதைக்கேட்டாலும் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் தனக்கு நிகரில்லை என்று நிரூபித்துக் காட்டியவர் கர்ணன்.
அப்படிப்பட்ட கர்ணனைப்போல் நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் கிரகம் ராகுவாகும். எனவே தான் ‘ராகுவைப்போல கொடுப்பானுமில்லை’ என்று அனுபவ வாக்காக முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ராகு சரியான இடத்தில் இருந்து அதன் திசை வந்தால் ராகு அள்ளி கொடுப்பார்!
இதேபோல் கேதுவும்,சரியான இடத்தில் இருந்தால் எதிர்பாராத ராஜயோகத்தை கொடுப்பார்.
ராகு,கேதுவை கொடுப்பாரும் இல்லை அதேபோல் இவர்களை போல் கெடுப்பாரும் இல்லை!