இன்று முதல் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு…

மசகு எண்ணெய் இன்மையால், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், இன்றிரவு முதல் மீளவும் மூடப்பட உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு முன்னரும், போதுமான அளவு மசகு எண்ணெய் கிடைக்காமையால், 2 சந்தர்ப்பங்களில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.