இன்று முதல் விலை அதிகரிக்கப்படும் பொருட்கள்…
முகக் கவசத்தின் விலையை 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அதன்படி ,இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவிக்கின்றார்.
இதற்கமைய ,டொலருக்கான பெறுமதி அதிகரித்துள்ளமையினால், முகக் கவசத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமையினாலேயே இந்த தீர்மானத்தை எட்டியதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, தற்போது 15 முதல் 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் முகக் கவசத்தின் புதிய விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றது.
குடிநீர் போத்தல் விலை அதிகரிப்பு
உற்பத்தி பொருட்களுக்கான மூலப் பொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வெற்று போத்தல்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களினால், குடிநீர் போத்தலுக்கான விலையை அதிகரித்த இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அதற்கமைய , ஒன்றரை லீட்டர் குடிநீர் போத்தலின் விலையை 120 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 5 லீட்டர் குடி போத்தலின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு
உள்நாட்டு பால் மா நிறுவனமான பெல்வத்த நிறுவனமும், பால் மாவின் விலையை அதிகரித்துள்ளது.
மேலும் பெல்வத்த பால் மா நிறுவனம் 400 கிராம் பால் மா பக்கெட்டொன்றின் விலையை 105 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் , 400 கிராம் பெல்வத்த பால் மா பக்கெட்டொன்றின் புதிய விலை 625 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் பெல்வத்த பால்மா பக்கெட் ஒன்றின் விலை 270 ரூபாவாக அதிகரிக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1570 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.