பயந்து பதுங்கும் ரஷ்ய வீரர்கள்! ரஷ்யாவை அவமானத்துக்குள்ளாக்கும் உக்ரைன்…
எட்டு ஆண்டுகளுக்கு முன் கிரீமியாவைப் பிடித்துக்கொண்டது போல, தெனாவட்டாக உக்ரைனுக்குள் நுழைந்து இப்போதும் எளிதாக அதைக் கைப்பற்றிவிடலாம் என கனவு கண்ட புடின் தப்புக்கணக்கு போட்டுவிட்டது போல் தெரிகிறது.
அப்படியெல்லாம் எங்கள் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது, ஒரு அடி நிலம் கூட விட்டுத் தரமாட்டோம் என கெத்தாக எதிர்த்து நிற்கிறது உக்ரைன்.
போதாக்குறைக்கு கிடைத்த ரஷ்ய படையினரை எல்லாம் துவம்சம் செய்கிறார்கள் உக்ரைன் வீரர்கள்.
தன் பக்கம் இழப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதும், டாங்குகளை சிதறடிப்பதுமாக உக்ரைன் வீரர்கள் துணிச்சலாக ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
அவ்வகையில், உக்ரைன் வீரர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்த, தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோம் என டாங்குகளுக்குப் பின்னால் ரஷ்ய வீரர்கள் பதுங்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இது போரின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிதான் என்றாலும், இப்போதுதான் முதன்முறையாக அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
முக்கிய தளபதிகள், பல வீரர்கள், எக்கச்சக்கமான தளவாடங்கள் என இழந்துள்ள ரஷ்ய தரப்பின் போர் யுக்தி பல இடங்களில் தவறாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நடுவழியில் வந்து மாட்டிக்கொண்டு டாங்குகளை இழந்ததைப் போல, இந்த வீடியோ காட்சியிலும் எசகு பிசகாக சிக்கிக்கொண்டு ரஷ்ய வீரர்கள் தடுமாறுவதைக் காணலாம்.
அவர்கள் கனரக ஆயுதம் தாங்கிய வாகனங்களில் பயணிக்கிறார்கள். தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததும் அவர்கள் திருப்பித் தாக்கியிருக்கவேண்டும்.
ஆனால், இந்த ரஷ்ய வீரர்களோ பாதுகாப்பான வாகனங்களிலிருந்து இறங்கி ஓடி பதுங்குகிறார்கள். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அவர்கள் பிரிந்து ஆளுக்கொரு பக்கம் நின்று திருப்பித் தாக்குவதுதான் முறை.
அதற்கு காரணம், அவர்கள் போருக்கு புதியவர்கள் என்பதா, இளைஞர்கள் என்பதா, அல்லது வயதானவர்கள் என்பதா என்பது தெரியவில்லை.
ஆக மொத்தத்தில் உக்ரைன் வீரர்களின் தாக்குதலை சமாளிக்க சரியான போர் யுக்திகள் இல்லாமல், ரஷ்யாவை அதன் வீரர்களே உலக அரங்கில் அவமானப்படுத்திவருகிறார்கள்.
உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து, கோபமுற்ற புடின், தனது இராணுவத் தளபதிகள் எட்டு பேரை பதவிநீக்கம் செய்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.