ரஷிய நடைப்பந்தைய வீராங்கணைக்கு 2 ஆண்டு தடை.
ரஷிய நடைப்பந்தய வீராங்கனை யெலினா லாஷ்மனோவா மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய உலக தடகள நேர்மை கமிட்டி அவருக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது.
அத்துடன் 2012 -ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி முதல் 2014-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி வரையிலான அவரது போட்டிகளின் முடிவுகளை தகுதி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி மற்றும் 2013-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் அவர் வென்ற தங்கப்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.