ராணுவ அணிவகுப்பை நடத்த தயாராகும் வடகொரியா.

உலக நாடுகள் பலமுறை கூறிவந்தும், வடகொரியா அவ்வபோது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், வடகொரியா மிகப்பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்த தயாராகி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
மேலும் இதற்காக வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள விமான நிலையத்தை நோக்கி சுமார் 6 ஆயிரம் துருப்புகள் வரை நகர்த்தப்பட்டு வருவதாகவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.