புதிய கொரோனா பிரழ்வு இலங்கைக்குள்ளும்?
புதிய ஒமிக்ரோன் பிரழ்வு இலங்கைக்குள்ளும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இதனை கருத்திற்கொண்டு பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டுமென சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி ,BA2 ஒமிக்ரோன் வைரஸின் துணை பிரழ்வாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த வைரஸ் தென்கொரியா, சீனா மற்றும் இந்தியா ஊடாக இலங்கைக்கு பரவுவதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுகிறது.
அதனை தடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும் எவ்வாறெனினும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் நோய் பரவலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அத்துடன் தடுப்பூசியை பெற்றிருப்பதும் கட்டாயமாகும். தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.