பகத் சிங் நினைவு நாள்: பஞ்சாபில் அரசு விடுமுறையாக அறிவிப்பு!

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவுநாளையொட்டி நாளை(மார்ச் 23) பஞ்சாபில் அரசு பொது விடுமுறை அறிவித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
நாளைய தினம் பஞ்சாப் மக்கள், பகத் சிங் பிறந்த ஊரான ஷகீத் பகத் சிங் நகா் மாவட்டம் காத்கா் காலனுக்குச் செல்லும் நோக்கில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பகவந்த் மான் தெரிவித்தார்.
முன்னதாக, பகத் சிங் பிறந்த காத்கா் காலனில்தான் பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக, பஞ்சாப் அரசு அலுவலகத்தில் முதல்வரின் படத்திற்குப் பதிலாக அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில்தான் பகத் சிங்கின் நினைவுநாள் பஞ்சாப் மாநிலத்தில் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.