24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் – அமைச்சர் செந்தில் பாலாஜி விவசாயிகளுக்கு அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி (Minister Senthil Balaji) பேரவைய தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) இன்று கேள்வி நேரத்தில் மடத்துக்குளம் உறுப்பினர் மாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் புதிய மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 87,465 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என அமைச்சர் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு 24 மணிநேரம் முன்முனை மின்சாரம் (Three Phase Electricty) வழங்க கடந்த ஆட்சியில் கட்டமைப்பை ஏற்படுத்த வில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை என்பதால் சமீபத்தில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்திய நிலையில், மின்சாரம் வழங்க உரிய கட்டமைப்பை ஏற்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது. விரைவில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.