டெஸ்ட் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 90/1.
24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 7 ரன்களில் வெளியேறினார். அதே நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய லபுசேன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஸ்மித் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. .
இந்நிலையில் இன்று தொடங்கிய 2 வது நாள் ஆட்டத்தில் கிரீன் , அலெக்ஸ் கேரி, இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர் .தொடர்ந்து விளாடிய இவர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர் , அலெக்ஸ் கேரி 67 ரன்களில் ஆட்டமிழந்தார் .தொடர்ந்து கிரீன் 79 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 391 ரன்கள் குவித்தது .
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி ,நசீம் ஷா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2 வது நாள் ஆட்ட நேரமுடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.