விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்ன்
மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம். சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர் .அதன்படி மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.