மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகம்…

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளன. கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2338.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.