ரஷியாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணை.

உக்ரைன் தலைநகரான கீவ் நகர் மீது நேற்று ரஷிய படைகள் நடத்திய குண்டு வெடிப்புகள், அந்த நகரை குலுங்க வைத்தது. வடமேற்கில் இருந்து பீரங்கி தாக்குதல், தொடர்ந்து நடத்தப் பட் டது. துப்பாக்கி சண்டைகளும் கீவ் நகரில் இடை விடாமல் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன. கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
புற நகரான புச்சா, ஹோஸ்டமெல், இர்பின் ஆகிய நகரங் களில் குறிப்பிட்ட பகுதிகளை ரஷியப் படைகள் தங்கள் வசப்படுத்தின.
ரஷிய படைகள் கைப்பற்றிய இடங்களை மீட்பதற்காக உக்ரைன் படைகள் தீர முடன் சண்டை யிடுகின்றன.
இந்தநிலையில், இதுவரை ரஷியாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் அனுப்பியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சுமார் ரூ.208 (25மில்லியன் யூரோ) கோடி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.