தங்கத்தின் விலையில் மாற்றம்.

நாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 154,500 ரூபாவாக காணப்படுவதாகவும் தங்க உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர்.