பெற்றோலின் விலை 49 ரூபாவால் அதிகரிப்பு.

நேற்று (25) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலையை 49 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.
ஆனால் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.