பொருளாதார நெருக்கடி ஒருநாள் வெளியீட்டை நிறுத்திய பிரபல பத்திரிக்கைகள்.
இரண்டு முக்கிய செய்தித்தாள்கள் காகிதப் பற்றாக்குறையால் தங்கள் அச்சு பதிப்புகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இந்த முடிவெடுத்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, 1948ல்இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கில மொழி நாளிதழான தி ஐலண்ட் மற்றும் சிங்களப் பதிப்பான திவைனா ஆகியவை “நிலவும் காகிதப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு” ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், முக்கிய தேசிய நாளிதழ்களும் கடந்த ஐந்து மாதங்களில் செலவுகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களாலும் பக்கங்களைக் குறைத்துள்ளன.
முன்னதாக கடந்த வாரம் இலங்கையில் காகிதப் பற்றாக்குறையால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கானபருவத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனிடையே இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320 ஆக உயர்ந்து விட்டது. கேஸ் சிலிண்டர் விலை 4,190 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சமையல் எரிவாயுவுக்கு பெரும் பற்றாக்குறையும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.