புதுமாப்பிள்ளை சவுத்தி.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான 33 வயதான டிம்சவுத்தி இந்த முறை கேகேஆர் அணிக்காக ஆட உள்ளார். ஐபிஎல்லில் அவர் இதுவரை 43 போட்டிகளில் 31 விக்கெட் எடுத்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலியான ப்ரியாபாஹியை கடந்த 20ம்தேதி திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு ஐபிஎல்லில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். ஆனால் அவர் தாமதமாக இணைந்ததால் இன்று களம் இறங்க வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக இலங்கையின் சமிங்கா கருணாரத்னே ஆடுவார் என தெரிகிறது.