அரசை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாதாம்! இராஜாங்க அமைச்சர் கஞ்சன கூறுகின்றார்.

ராஜபக்சக்கள் தலைமையிலான அரசை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாது என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“2015ஆம் ஆண்டு 8.2 வீதமாக இருந்த வெளிநாட்டுக்கையிருப்பு 2019இல் 7.6 வீதமாகக் குறைவடைந்தமைக்கு நல்லாட்சி அரசே காரணம்.
தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றபோதும் அரசையும் நாட்டையும் வீழ்ச்சியுறச் செய்வதற்காக எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தற்போதைய சவால் நிலையை நாம் நிச்சயம் எதிர்கொள்வோம்” – என்றார்.