கூட்டமைப்பினரை எதிர்க்கின்றோம்; தமிழர்களை அரவணைக்கின்றோம்! இப்படிக் கூறுகின்றார் கம்மன்பில.
“நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர். அவர்கள் எம்முடன் இணையலாம்.”
இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஆயுதம் மூலம் அடைய முடியாமல்போனதை டொலர் மூலம் பெறத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர். இந்த அரசியலையே நாம் எதிர்க்கின்றோம். மாறாக தமிழ் மக்களை எதிர்க்கவில்லை. அவர்களும் எமது பயணத்தில் இணையலாம்.
இந்த நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சி ஏற்பட இடமளிக்கமாட்டோம்” – என்றார்.