மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பற்றி எரிந்த கார்.

தெமட்டகொட பேஸ்லைன் மேம்பாலத்தில் பயணித்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
பொரளையில் இருந்து ஒருகொடவத்தை நோக்கி பயணித்த காரில் அவ்வேளையில் இருவர் இருந்ததாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் காரின் இயந்திரம் தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்த போது தீ வேகமாக பரவி கார் முற்றாக எரிந்து நாசமானது.
காரில் பயணித்தவர்கள் கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.