இயந்திரத்தில் தொழில்நுட்ப அதிர்வுகள்; லண்டனுக்குத் திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப அதிர்வுகள் உணரப்பட்டதால் அது லண்டனுக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
நேற்று அதன் போயிங் 777-300 ரக விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் CNAஇடம் தெரிவித்தது.
SQ305இல் மொத்தம் 225 பயணிகளும் 18 சிப்பந்திகளும் இருந்தனர்.
விமான இயந்திரங்களில் ஒன்றில் அதிர்வுகள் உணரப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக விமானிகள் லண்டனுக்கு மீண்டும் திரும்ப முடிவெடுத்தனர் என்று நிறுவனப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 2 மணிவாக்கில் விமானம் லண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
சம்பவம் குறித்து அதன் பொறியாளர்கள் விசாரணை நடத்துவதாக SIA தெரிவித்தது.